என்ன சொல்லி நன்றி சொல்வேன் Lyrics – Ps. V. Sam David Raj
Lyrics:
என்ன சொல்லி நன்றி சொல்வேன்
எதை சொல்லி நன்றி சொல்வேன்
ஒன்றல்ல இரண்டல்ல தேவனின் நன்மைகள்
எத்தனை எத்தனை கணக்கில் இல்லை
நன்றி சொல்ல நாவுகள் இல்லை
பதில் செய்திடவும் திராணியும் இல்லை
Stanza 1
உலகம் தோன்றும் முன்னே முன்குறித்தீர் அதை சொல்லவா
தாயின் வயிற்றில் பாதுகாத்தீர் அதைசொல்லவா
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
ஆதரித்தீரே அதை சொல்லவா
நன்றி சொல்ல நாவுகள் இல்லை
பதில் செய்திடவும் திராணியும் இல்லை
என்ன சொல்லி நன்றி சொல்வேன்
எதை சொல்லி நன்றி சொல்வேன்
Stanza 2
துக்கத்தில் அழியாமல் துணை நின்றீர் அதை சொல்லவா
துன்பத்தில் சோர்ந்திடாமல் கூட நின்றீர் அதை சொல்லவா
வியாதி நேரத்தில் சுகம் தந்து வாழ வைத்தீர் அதை சொல்லவா
நன்றி சொல்ல நாவுகள் இல்லை
பதில் செய்திடவும் திராணியும் இல்லை
என்ன சொல்லி நன்றி சொல்வேன்
எதை சொல்லி நன்றி சொல்வேன்
Stanza 3
தனிமை நேரத்தில் துணையானீர் அதை சொல்லவா
ஜெபத்தின் நேரத்தில் பதிலானீர் அதை சொல்லவா
கைவிட்ட நேரத்தில் இம்மட்டும் எனக்கு கைகொடுத்தீரே அதை சொல்லவா
நன்றி சொல்ல நாவுகள் இல்லை
பதில் செய்திடவும் திராணியும் இல்லை
என்ன சொல்லி நன்றி சொல்வேன்
எதை சொல்லி நன்றி சொல்வேன்
Lyrics And Tune: V. Sam David Raj
Featuring: Sister Janiffer David Raj
Music : Evg. Brother Stephen