கண்களில் கண்ணீர் Kangalil Kanneer Lyrics – Pr. Elsin Edison & Dhass Benjamin
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை நேசிப்பாரோ
கண்களில் கண்ணீர் இதயத்தில் ஏக்கத்தோடு
யார் என்னை தேற்றுவாரோ
ஏங்கின என்னையும் தூக்கி என்னை நேசிக்க- – என்று
ஏங்கின என்னையும் தூக்கி என்னை தேற்றிட
உம்மை போல யாரும் இல்லையே
நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
என்னையும் நேசித்தாரே
நேசிக்கும் தேவன் இயேசு உண்டு
உன்னையும் நேசிப்பாரே
உன்னையே தந்திடு ஓடோடி வந்திடு
இயேசு உன்னை நேசிப்பாரே
என் பாவங்கள் எல்லாம் நீர் அறிவீர்
என் குற்றங்கள் எல்லாம் நீர் அறிந்தீர்
ஆனாலும் நீர் என்னை விட்டு விலகாமல்
என்னையும் நீர் நேசித்தீர்
என் மீறுதல் எல்லாம் நீர் அறிவீர்
தனிமையின் நிலையெல்லாம் நீர் அறிந்தீர்
தாயைப்போல் தேற்றினீர் தந்தைப்போல் தூக்கினீர்
என்னையும் நீர் நேசித்தீர்
Kangalil Kanneer- கண்களில் கண்ணீர்
Lyrics, Tune, Sung by, Pastor. Elsin Edison
Featuring: Dhass Benjamin
Music: Blessen Sabu