சிமிர்னா சபை SMYRNA CHURCH Lyrics – MARIA RAMESH & U T MINISTRY
LYRICS : BASED ON REVELATION 2ND CHAPTER SMYRNA CHURCH
சிமிர்னா சபையின் தூதனுக்கு
நீ எழுதவேண்டியது என்னவெனில்:
முந்தினவரும் பிந்தினவரும்,
மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது
உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும்,
நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும்
உனக்கிருக்கிற தரித்திரத்தையும்,
தன்னை யூதரென்று சொல்லி யூதராயிராமல்
சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்
செய்யும் தூஷணம் அறிந்திருக்கிறேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்
காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுகிறவன்
இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
நீ படப்போகிற பாடுகளைக்குறித்து
எவ்வளவும் பயப்படாதே
பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்
பத்துநாளளவும் உபத்திரவம்தான்
ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிருந்தால்
ஜீவகிரீடம் நான் தருவேன்.
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக்
காதுள்ளவன் எவனும் கேட்கக்கடவன்
ஜெயங்கொள்ளுகிறவன்
இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.
TITLE : SMYRNA CHURCH சிமிர்னா சபை
SONG LYRICS TUNE AND SUNG BY MARIA RAMESH