Unakul Irupavar Periyavar Lyrics – Sam George, George Stephen & Bishop Dr. K. Jacob
Lyrics
உனக்குள் இருப்பவர் பெரியவர் உள்ளம் கலங்காதே
உலகை படைத்தவர் உன்னுடன் உள்ளம் மகிழ்ந்திடு
உயிரோடு எழுந்தவர் உன்னுடன்
புது ஜீவன் தந்திடுவார்
உலகை ஜெயித்தவர் உன்னுடன்
இன்று ஜெயத்தை தந்திடுவார்
எழுந்து நின்று துதித்து பாடிடு
கரங்களை அசைத்து பாடிடு
எழுந்து நின்று நடனம் ஆடிடு
கரங்களை தட்டி பாடிடு
எரிகோவை தகர்த்தவர் உன்னுடன்
வாழ்க்கை தடையை நீக்கிடுவார்
யோர்தானை பிளந்தவர் உன்னுடன்
புதுப்பாதை திறந்திடுவார்
உம்மாலே ஒரு சேனைக்குள்
பாய்ந்து சென்றிடுவேன்
உம்மாலே ஒரு பதிலை
தாண்டி சென்றிடுவேன்
செங்கடலை பிளந்தவர் உன்னுடன்
வாழ்வில் பாதை காட்டிடுவார்
கோலியாத்தை வென்றவர் உன்னுடன்
வாழ்வில் வெற்றி தந்திடுவார்
உம்மாலே சாத்தானை
எதிர்த்து வென்றிடுவேன்
உம்மாலே அவன் சூழ்ச்சியை
ஜெபத்தில் வென்றிடுவேன்
Lyrics : George Stephen
Sung by : Bishop Dr. K Jacob
Music : Sam George